ஈராக்கின் மொசூல் நகரில் சர்வதேச நாடுகள் வான்வெளி தாக்குதல்: 100 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

air iraqஈராக் நாட்டின் மொசூல் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 100 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மொசூல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்வதேச நாடுகளின் வான்வெளிப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈராக் இராணுவம் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது.

தாக்குதலின் போது மொசூல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் யாரும் இல்லை என்றும் பல்கலைக் கழக கட்டிடங்கள் பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ஈராக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 17 மூத்த தலைவர்களும், பல்வேறு உள்ளூர் ஆதரவாளர்களும் இந்த வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக மொசூல் நகர் அமைந்துள்ள நினெவேஹ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் நுஜய்பி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply