தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல்: பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் முடக்கம்

indexதீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டலை தொடர்ந்து பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.பாகிஸ்தானில் நாளை (23–ந்தேதி) தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து இந்த விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. அதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பும், ராணுவ தளவாடங்களும் இடம் பெறுகின்றன.அதற்கான ஒத்திகை இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் நடந்தது. அதில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதற்காக செல்போன்களை பயன்படுத்த இருப்பதும் தெரியவந்தது.

அதை தொடர்ந்து நேற்று இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன. ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்த சில மணி நேரங்களில் சேவைகள் மீண்டும் தொடங்கின.

அதன் காரணமாக ராணுவ அணிவகுப்பு ஒத்திகையின் போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கடுமையான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply