நான் அமெரிக்காவின் அதிபரானால் ஈரான் அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை ரத்து செய்வேன்: டொனால்ட் டிரம்ப் சபதம்

diramஅமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். இந்நிலையில், ஒபாமா அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை குறைகூறி வரும் டிரம்ப், நான் அமெரிக்காவின் அதிபரானால் முதல்வேலையாக ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன் என அறிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேல் அரசியல் நடவடிக்கை குழுவின் ஆண்டாந்திர கருத்தரங்கில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:-

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் தலைமையிடமாக திகழும் ஈரானுக்கு நாம் எந்த கைமாறும் பெறாமல் 150 பில்லியன் டாலர்களை அளித்துள்ளோம்.

தற்போதைய தடைகளுக்கான காலம் கடந்தபின்னர், மிகப்பெரிய அணு ஆயுத பலத்துடன் ஈரான் மீண்டும் தலைநிமிரும். மத்திய கிழக்கு பிராந்தியத்தை நிலைகுலைய வைக்கவும், அங்கு ஆதிக்கம் செலுத்தவும் நினைக்கும் ஈரானுக்கு எதிராக நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

இப்போதும், எப்போதும் ஈரான் நமக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். ஆனால், நான் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சனையை எப்படி கையாள வேண்டும் என எனக்கு தெரியும். முதல்வேலையாக, அமெரிக்காவுக்கு பேரழிவை உருவாக்கக்கூடிய ஈரான் அணு ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்.

இரண்டாவதாக, உலகம் முழுவதும் தீவிரவாத குழுக்கள் என்னும் விதைகளை தூவியுள்ள ஈரானின் உலகளாவிய தீவிரவாத வலையை அறுத்தெறிவேன். மூன்றாவதாக, உலக நாடுகளுடன் செய்துகொண்ட அமைதி தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் அமல்படுத்த வேண்டும் என அந்நாட்டை வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply