பெல்ஜியம் விமான நிலைய குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்தனர்
பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.இந்த தாக்குதலை மனித வெடிகுண்டாக வந்த ஒரு தீவிரவாதி நடத்தி இருக்கலாம் என ஊடகங்கள் கணித்துள்ள நிலையில் இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
விமான நிலைய தாக்குதலையடுத்து, புருசெல்ஸ் நகரில் உள்ள மாயெல்பீக் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அங்கிருந்த அனைவரும் உயிர்பயத்தில் ஓட்டம் பிடித்தனர். முதலுதவி மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் நிலையம் பூட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் பலியானவர்களை பற்றிய விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மேற்கண்ட இரு இடங்களிலும் நடைபெற்ற தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply