பெல்ஜியம் விமான நிலைய தாக்குதல் நடந்தது எப்படி?: புரூசெல்ஸ் நகர மேயர் பேட்டி
பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் விலை மதிப்பில்லாத 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதல் நடந்தது எப்படி? என்று ஸவன்டெம் நகர மேயர் பேட்டியளித்துள்ளார்.விமான நிலையத்துக்கு ஒரு டாக்சியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளது.முதலில் மூன்று பேர்களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும்.
தனது பேட்டியின்போது இவ்வாறு தெரிவித்த ஸவன்டெம் நகர மேயர் பிரான்சிஸ் வெர்மெய்ரென், தப்பிச்சென்ற மூன்றாவது நபரை போலீசார் வலைவீசி தேடிவருவதாக கூறி, அவனது புகைப்படங்களை நிருபர்களிடம் காண்பித்தார்.
முகத்தில் கண்ணாடி அணிந்தபடி, வெள்ளைநிற மேல்கோட், கருப்பு தொப்பியுடன் காணப்படும் குறுந்தாடி நபர், ஒரு டிராலியில் தனது சூட்கேசை வைத்து தள்ளிச்செல்லும் காட்சிகள் அந்த போட்டோக்களில் இடம்பெற்றுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply