பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது

belgiyamபெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் விலை மதிப்பில்லாத 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று, விமான நிலையத்துக்கு ஒரு டாக்சியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளது.

முதலில் மூன்று பேர்களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும் என கூறப்பட்டது.

இந்நிலையில் பெல்ஜியம் காவல்துறை நாஜிம் லாச்ரோவி என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர். ஆண்டர்லெச்ட் மாவட்டத்தில் நாஜிம் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று விமான நிலைய சி.சி.சி.டி. கேமராவில் பதிவான மூன்று நபர்களில் ஒருவன் நாஜிம் லாச்ரோவி என்பது குறிப்பிடத்தக்கது. நாஜிமின் கைது, இந்த தாக்குதலில் தொடர்ப்புடையவர்களை கண்டுபிடிக்க உதவக்கூடும்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய இரு தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் முன்னர் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தற்போது புரூசெல்ஸ் நகர போலீசார் நடத்திவரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply