அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: அரிசோனா மாகாணத்தில் ஹிலாரி, டிரம்ப் அபார வெற்றி

Clintonஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், பெரிய மாநிலமான அரிசோனாவில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதே போன்று ஜனநாயக கட்சியில் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் அமோக வெற்றி பெற்றார். சிறிய மாகாணங்களான இடாஹோ, உட்டாவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரியின் போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் வென்றார்.

 

உட்டா மாகாண குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டிரம்பின் போட்டியாளரான டெட் குரூஸ் வெற்றி பெற்றார்.

 

அரிசோனா மாகாணத்தில் பெர்னி சாண்டர்ஸ் பெருமளவில் முதலீடுகள் செய்துள்ளபோதும், அங்கு ஹிலாரி அமோக வெற்றி பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்யும் பிரதிநிதிகள் ஆதரவை பொறுத்தமட்டில், 2,383 வாக்குகளை பெற்றாக வேண்டிய நிலையில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி 1,681 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

 

குடியரசு கட்சியில் 1,237 ஓட்டுகள் பெற்றாக வேண்டிய நிலையில் டொனால்டு டிரம்ப் 739 ஓட்டுகள் வாங்கி முன்னிலை வகிக்கிறார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply