மிருக மனிதர்கள் சமூகத்தில் பண்பாடுள்ள சந்ததி உருவாக பாடசாலைகள் மிக முக்கியம் :ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

maithri-4கொடூரமான தன்மைகளுடன் மனிதாபிமான மற்றவர்களாக மனிதர்கள் வாழந்து வருகின்ற சமூகத்தில் பண்பாடுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு பாடசாலைகள் முன்னின்று செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

பிள்ளைகளதும் தாய்மார்களினதும் உயிர்களுக்கு விலைபேசும் ஒரு காலகட்டத்தில் அப்பாவி மிருகங்களின் தோல்களை கொடூரமாக உயிருடன் அகற்றும் மிருகத்தனமான மனிதர்கள் வாழும் ஒரு சமூகத்தில் பண்பாடுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு பாடசாலைகள் முன்னின்று செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பௌதீக வளங்களில் நாடு எவ்வளவுதான் அபிவிருத்தி அடைந்தபோதும் அங்கு வாழும் மனிதர்கள் பண்பாடற்றவர்களாக இருக்குமிடத்து இவ் அபிவிருத்திகளின் பயனை அடைய முடியாதென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாட்டின் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் இன்று மாணவர்கள் பரீட்சைகளில் அதி சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலை கல்வி ஆகிய துறைகளின் அபிவிருத்திக்காக தேசிய மட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இன்று எமது தேசிய பொருளாதாரத்திற்கு அதிகபட்ச பங்களிப்பினையும் ஆகக்கூடிய அந்நிய செலாவணியையும் எமது நாட்டு பெண்களே ஈட்டித் தருவதாகவும் பொருளாதாரத்திற்காக மனித வளத்தினை அபிவிருத்தி செய்து நாட்டின் தொழிற்படையை பயிற்றப்பட்ட தொழிற்படையாக மாற்றியமைப்பது அரசின் நோக்கமாகவுள்ளதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply