பிரசல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தனர்
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதலை அரங்கேற்றிய சகோதரர்கள் இருவரும், அமெரிக்கா வைத்திருந்த தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் 22-ந் தேதி ஜாவெண்டம் சர்வதேச விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தீவிரவாதிகள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த தாக்குதல்களை நடத்தியவர்களில் 2 பேர் சகோதரர்கள் எனவும், அவர்கள் காலித் மற்றும் பிராம் எல் பக்ரூயி எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்கா சேகரித்து வைத்திருந்த தீவிரவாதிகளின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply