சவுதியில் 4 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் இலங்கைக்கு வந்துள்ளது!
சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply