சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் ஆலோசிப்போம் – மாவை சேனாதிராசா

சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் எம்மையும் கலந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் உத்தியோக பூர்வமாக அழைத்தால் மடடுமே இது குறித்துக் கலந்து ஆலோசிப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்படுமென பாராளுமன்றத்தில் அமைச்சர் திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தமை குறித்துக் கருத்துக் கேட்போதே இவ்வாறு பதிலளித்தார். சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து எமக்கு உத்தியோக பூர்மாக அழைப்பு வந்த பின்னர் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் கூடி ஆராயு மெனவும் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply