ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல்: 30 பேர் பலி
ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு கோப்பைகள் வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.விழாவில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
அதில் அங்கு கூடியிருந்தவர்களில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர். 65–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளது.எனவே சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் மேயர் அகமது ஷாகரும் ஒருவர் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது பாதுகாவலர்கள் 5 பேரும் பலியாகினர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தீவிர வாதிகள் சபியுல்லா அல் – அன்சாரி (18) இத்தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலில் 60–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்தாகவும், 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply