பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் மாயமான தமிழரை கண்டுபிடிக்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

jeyaபிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் மாயமான தமிழர் ராகவேந்திரன் கணேசனை கண்டுபிடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 23 பேர் பலியாயினர். சமீபத்தில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

 

இந்த குண்டுவெடிப்பின் போது, இன்ஃபோசிஸ் ஊழியரும், தமிழருமான ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். அவரைத் தேடும் பணிகளை, இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பெல்ஜியம் அரசு ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.

 

இந்நிலையில், ராகவேந்திரன் கணேசனை மீட்கும்படி, பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

 

கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:-

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன், தன்னுடைய பெற்றோருக்கு மூத்த மகன். அவரது இளம் மனைவி குழந்தை பிறந்ததை அடுத்து தற்போது சென்னையில் இருக்கிறார்.

 

அவரது மொத்த குடும்பமும் ஆழ்ந்த துயரில் உள்ளது. தன்னுடைய மகனை கண்டுபிடிக்கக் கோரி என்னிடம் உதவி கோரியுள்ளனர்.

 

கணேசனை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை மூலமாகவும், பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

கவலையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்திற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply