பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

belgiyamபெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் 22-ந் தேதி ஜாவெண்டம் சர்வதேச விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 எனவும், காயம் அடைந்தோர் எண்ணிக்கை சுமார் 300 எனவும், அவர்களில் 61 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

 

இந்நிலையில் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையதாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மூன்றாவது நபரின் பெயர் பாய்கல் என்று பெல்ஜியம் நாட்டின் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இவரது உருவம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது. ஏற்கன்வே அபூபக்கர் மற்றும் ராபாஹ் என்ற இருவர் மீதும் குற்றச்சாட்டு படிவாகியுள்ளது .

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply