பாராளுமன்றம் ஏப்ரல் 5 ஆம் திகதி அரசமைப்பு சபையாக கூடுகிறது
பாராளுமன்றம் ஏப்ரல் 5 ஆம் திகதி முதன் முதலாக அரசமைப்பு சபையாகக் கூடவுள்ளதென்றும் அப்போது புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்படுமென்று அமைச்சரும் சபை முதல்வருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.புதிய அரசியமைப்பை தயாரிப்பதற்காக பாராளுமன்றம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசமைப்பு சபையாக மாறும். அரசமைப்பு சபை நடவடிக்கைகளில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் சபைக்குள் ஒன்று வெளியில் ஒன்றுமாய் பேசுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தில் நடைபேற்ற பேச்சு வார்த்தையின் போது இணக்கம் தெரிவித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெளியில் வந்து இதை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த மாதிரியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளவே நாம் அரசமைப்பு சபை தொடர்பாக பகிரங்கத் தன்மையுடன் நடந்து கொள்ள விரும்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply