ஐ.எஸ். பயங்கரவாதம் புலனாய்வுத் துறையை பலப்படுத்த வேண்டும் : கேர்ணல் சுசந்த
இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு இந்நாட்டின் புலனாய்வுத் துறையினரை பலப்படுத்த வேண்டும் என யுத்தம் தொடர்பான விசேட நிபுணர் ஓய்வு பெற்ற கேர்ணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஐ.எஸ். அமைப்பு பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தாக்குதல்களை நடாத்தியிருந்தது. ஐ.எஸ். அமைப்பு கைப்பற்ற எதிர்பார்த்துள்ள நாடுகள் பற்றி இதற்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எது எப்படிப் போனாலும், இலங்கையை தரைவழியாக ஆக்கிரமிப்பதென்பது அவ்வமைப்பினால் முடியாத ஒரு காரியம்.
அவ்வாறு இலங்கையை அவ்வமைப்பு ஆக்கிரமிப்பதாக இருந்தால், எமக்கு முன்னால் இந்தியாதான் அதன் பாதிப்பை எதிர்நோக்க வேண்டிருக்கும் எனவும் கேர்ணல் சுசந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply