அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: வாஷிங்டன், அலாஸ்காவில் ஹிலாரி அதிர்ச்சி தோல்வி

cilintonஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8–ந்தேதி நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன், வெர்மோன்ட் செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இதுவரை நடந்த போட்டிகளில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் நேற்று அலாஸ்கா மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் தேர்தல் நடந்தது. அதில் இருவரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இறுதியில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த 2 மாகாணங்களிலும் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார்.

வாஷிங்டனில் ஹிலாரிக்கு 24 சதவீத வாக்குகளும், சாண்டர்சுக்கு 76 சதவீத வாக்குகளும் கிடைத்தன. அலாஸ்காலில் ஹிலாரிக்கு 21 சதவீதமும், சாண்டர்சுக்கு 79 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. இதன் மூலம் பின் தங்கிய நிலையில் இருந்த சாண்டர்ஸ் ஹிலாரியை நெருங்கி வருகிறார்.

நேற்று ஹவாயிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் இறுதி வரை நடக்கிறது. அதில் கட்சியின் 2,383 நிர்வாக குழு உறுப்பினரின் ஆதரவை பெறுபவர் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply