ஐ.எஸ் இடமிருந்து பல்மைரா நகரம் மீட்கப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் வரவேற்பு

ban-ki-moonசிரியாவின் வரலாற்று சிறப்புமிக்க புராதான நகரமான பால்மைராவை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சிரியா படைகள் கைப்பற்றியுள்ளன. இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பல பழங்கால நினைவுத்தூண்களையும், நினைவுச் சின்னங்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக அழித்தொழித்து நாசப்படுத்தி வந்தனர். எஞ்சியிருக்கும் சில கலைப் பொக்கிஷங்களயாவது காப்பாற்றும் நோக்கத்தில் அரசுக்கு ஆதரவான போராளி குழுக்களுடன் ஒன்றிணைந்து இங்கு ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சிரியா ராணுவத்தினர் மூர்க்கமாக போரிட்டு வந்தனர்.

 

நேற்று அதிகாலை பால்மைரா நகரின் கிழக்கு நுழைவாயில் வழியாக முன்னேறிச் சென்ற அரசுப் படைகள், அங்கிருந்த தீவிரவாதிகளை புறமுதுகிட்டு ஓடவைத்து பால்மைரா நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பல்மைரா நகரம் மீட்கப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதுபோன்ற தங்களது மனித குலத்திற்கு சொந்தமானவற்றை பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

முன்னதாக பல்மைரா நகரம் மீட்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply