அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது: பயணிகள் விமானம் ரத்து
அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இதனால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.அமெரிக்காவில் டெட்ராஸ்ட்டில் இருந்து பிலாடெல்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதற்காக டெட்ராய்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர்.அப்போது அந்த விமானத்தை ஓட்டி செல்லும் விமானி மற்றும் துணை விமானியை மது போதை பரிசோதனை நடத்தினர். அப்போது துணை விமானி அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அந்த விமானி கைது செய்யப்பட்டார். 50 வயது மதிக்கத்தக்க அவர் பென்சில்வேனியாவை சேர்ந்தவர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
துணை விமானி மது போதையில் இருந்ததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்துக்கு விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply