பெல்ஜியம் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட 3–வது குற்றவாளி விடுதலை
கடந்த 22–ந் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸிசில் விமான நிலையம மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 3 இடங்களில் தற்கொலை தாக்குதல் மூலம் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதில் 32 பேர் பலியாகினர். 300 பேர் காயம் அடைந்தனர்.விமான நிலைய தாக்குதலில் 3 தற்கொலை படை தாக்குதல் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ‘சி.சி.டி.வி.’ காமிரா (‘கண்காணிப்பு காமிரா’) மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அதில் கருப்பு கோட் அணிந்து டிராலியில் வெடிகுண்டு நிரப்பிய சூட்கேஸ்களை தள்ளிக் கொண்டு வந்த இப்ராகிம் எல் பக்ரோயி மற்றும் நஜிம் லாசரோயி ஆகிய தற்கொலை படை தீவிரவாதிகள் பலியாகினர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிஆவார்.
இவர்களது அருகே வெள்ள நிற டிப்டாப் கோட், சூட் உடையில் வெள்ளை நிற தொப்பி அணிந்தபடி டிராலியில் ஒருவர் சூட்கேஸ் வைத்து தள்ளி வந்தார். அந்த நபர் குண்டு வெடிப்பில் உயர்பிழைத்து தப்பிவிட்டார். அவர் 3–வது குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவரது பெயர் பைகால் செபோயுஎன தெரியவந்தது. அவர் பகுதிநேர பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.
அவரிடம் பெல்ஜியம் போலீசார் தனி இடத்தில் வைத்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அதில் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் இவருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவே அவரை பெல்ஜியம் போலீசார் விடுதலை செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply