முடிவுக்கு வந்தது ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தல் விவகாரம் : கடத்தியவர் சரண்

PLENEஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விமானத்தின் படிகளில் ஒடி இறங்கி தப்பிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

அலெக்ஸாண்டிரியாவிலிருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த இந்த ஈஜிப்ட் ஏர் விமானம், தற்கொலை குண்டு பொருத்தப்பட்டிருந்த அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறிக்கொண்ட ஒருவரால் சைப்ரஸுக்குக் கடத்திச் செல்லப்பட்டது. அவரது கோரிக்கைகள் என்ன என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது.

அவர் மன நலம் குன்றியவர் என்றும், அவருக்கு அரசியல் நோக்கங்கள் ஏதும் இல்லை என்றும் சைப்ரஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply