இலங்கையில் மாற்று வழிகளில் 24 மணிநேரமும் மின்சாரம்

siyaமின்சார நெருக்கடி உள்ள போதும் மின்வெட்டு அமுல்படுத்தாது மாற்றுவழிகளினூடாக அதற்கு தீர்வு வழங்கி 24 மணி நேரமும் மின்சார வசதி வழங்க அரசாங்கம் நடவடிக்ைக எடுத்து வருவதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட சலுகை திட்டமொன்றை ஆரம்பிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 20 வீதத்தினால் மின் பாவனையை குறைக்கும் பாவனையாளர்களின் மின் பட்டியலுக்கான கட்டணத்தை ரத்துச் செய்து இலவசமாக வழங்கவும் 10 வீதம் குறைவாக பயன்படுத்தும் பாவனையாளர்களின் கட்டண தொகையை 50 வீதத்தினால் குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை இருவாரங்களில் தணியும் என அமைச்சு எதிர்பார்ப்பதோடு பரிசில் வழங்கல் மற்றும் மாற்று வழிகளினூடாக மொத்த மின்பாவனையை 10 வீதத்தினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று(29) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, மின்சார சபை தலைவர் அனுர விஜேபால,பொதுமுகாமையாளர்.எம்.சி.விக்ரமசேகர ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் 400 மெகா வோர்ட் மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டியுள்ளது.வரட்சி, மின்பாவனை அதிகரிப்பு மட்டுமன்றி அசாதாரண நிலையினால் கடந்த சில மாதங்களில் மின்பாவனை ஒருபோதுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க மின்சார பாவனையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு சீட்டிழுப்பினூடாக பரிசில் வழங்க இருக்கிறோம்.

ஏப்ரல் மாத மின்பட்டியலில் பாவித்த மின்சார அலகுகளின் எண்ணிக்ைக மார்ச் மாதம் பாவித்த அலகுகளை விட 20 வீதம் குறைவாக இருந்தால் அவர்களின் ஏப்ரல் மாத மின்பட்டியல் கட்டணம் ரத்து செய்யப்பட்டு மின்சாரம்இலவசமாக வழங்கப்படும். அதே போன்று மின் பாவனை அலகுகள் 10 வீதத்தை விட குறைவாக இருந்தால் 50 வீத சலுகை வழங்கப்படும்.

20 வீதமாக குறைக்கும் பாவனையாளர்கள் ஆயிரம் பேர் சீட்டிழுப்பினூடாக தெரிவு செய்யப்பட இருப்பதோடு 10 வீதம் குறைக்கும் பாவனையாளர்கள் 5 ஆயிரம் பேர் சீட்டிழுப்பினூடாக தெரிவு செய்யப்படுவர். இதற்காக பாவனையாளர்கள் தம்மை முதலில் குறுந்தகவலினூடாக தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது தவிர வேறு சில மாற்றுத் திட்டங்களையும் முன்னெடுக்க இருக்கிறோம்.மக்களுக்கு இடையூறு இன்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதே ஜனாதிபதியினதும், பிரதமரினதும் நோக்கமாகும். இந்த நெருக்கடி நிலையில் மின்வெட்டு அமுல்படுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இருந்தாலும் வேறு பல வழிகளில் இதனை தீர்க்க முயன்று வருகிறோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அஜித் பி பெரோரா, மொத்த மின்பாவனையை 10 வீதத்தினால் குறைக்கும் எமது இலக்ைக அடையும் ஒரு வழியாகவே இந்த சீட்டிழுப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 3 மாத காலத்திற்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளபோதும் தொடர்ந்து மக்களை ஊக்குவிப்பதற்காக இவ்வாறான பரிசில் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். சூரிய மின் கலங்களை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசியல் இலாபத்திற்காக நாம் மின்வெட்டு அமுல்படுத்தாமல் காலத்தை கடத்தவில்லை. 2012 இலும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.மின்வெட்டு மேற்கொள்ள வேண்டும் என பொறியியலாளர் சங்கமும் கோரியுள்ளது.ஆனால் நாம் பொதுமக்களின் நலன்களை சிந்தித்தே பல் வேறு மாற்றுவழிகளினுடாக மின்சாரத்தை சேமிக்க முயன்று வருகிறோம்.

தேவை ஏற்பட்டால் அவசர மின் கொள்வனவுக்கு தேவையான இயந்திரங்களையும் தருவிக்க இருக்கிறோம்.இது குறித்து இன்று (30) ,அமைச்சரவையில் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும். எவ்வாறாவது 24 மணி நேரமும் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் இலக்ைக அடைவதற்கே நாம் பாடுபட்டு வருகிறோம்.

எமது மின் கட்டமைப்பில் பல சிக்கல்கள் இருக்கின்றன.நோயாளியின் நோய்கள் என்ன என்ன என அடையாளங்கண்டுள்ளோம். அவற்றுக்கு மருந்து செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பொது முகாமையாளர் விக்ரமசேகர குறிப்பிட்டதாவது:மகாவலியை அண்மித்த பகுதிகளில் போதிய நீர் உள்ள போதும் குடிநீருக்காகவும் நீர்ப்பாசனத்திற்காகவும் அவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அவை ஏப்ரல் 15 ஆகும் போது விவசாயத்திற்காக திறக்கப்படுவதோடு நீர் மின் உற்பத்தி வழமைக்கு திரும்பி விடும். இவ்வாறு 350 மெகா வோர்ட் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நீர் மின் உற்பத்தி குறைவடைந்து அனல் மின் மற்றும் எரிபொருளினூடான உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மையும் தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply