காதலன் இதயத்தை வெட்டி எடுத்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை: வங்காள தேச கோர்ட்டில் தீர்ப்பு
வங்காள தேசத்தில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக பணி புரிந்தார்.உயிருக்குயிரான காதலர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்தனர். செக்ஸ்சிலும் ஈடுபட்டனர். ஒரு கால கட்டத்தில் சோனாலியை திருமணம் செய்ய ஷிபான் மறுத்துவிட்டார்.மேலும் இவருடன் ஆன ‘செக்ஸ்’ உறவை ரகசியமாக அவரது லேப்டாப்பில் பதிவு செய்து இருந்தார். அது போன்று பல பெண்களுடன் வைத்திருந்த உறவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சோனாலி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று குளிர்பானத்தில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து ஷிபானுக்கு சோனாலி கொடுத்தார். அதை குடித்ததும் ஷிபான் மயங்கி விழுந்தார்.
உடனே, அவரது கையை சோனாலி கயிற்றால் கட்டினார். பின்னர் அவரது குரல் வளையை கத்தியால் அறுத்து கொலை செய்தார். அதன் பிறகும் அவர் மீதான ஆத்திரம் தணியவில்லை.
ஷிபானின் மார்பை கத்தியால் வெட்டி பிளந்தார். உள்ளே இருந்த அவரது இதயத்தை வெட்டி வெளியே எடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து சோனாலியை போலீசார் கைது செய்தனர்.
பிறகு அவர் மீது குல்னா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் ஷிபானுக்கு பெரிய இதயம் இருக்க வேண்டும் என கருதினேன். அதன் அளவை பார்க்கவே வெளியே எடுத்தேன் என்றார்.
இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொடூர கொலை செய்த சோனாலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
பொதுவாக வங்காள தேசத்தில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் விதிவிலக்காக அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டதாக அரசு வக்கீல் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply