மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஹிதின் கியாவ் பொறுப்பேற்றார்

meanmaarமியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் இன்று பொறுப்பேற்றார்.மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இந்த நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வருகிற 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து புதிய அதிபர் வருகிற ஏப்ரல் 1–ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். மியான்மர் சட்டப்படி அதிபரை எம்.பி.க்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன்று அந்நாடின் அதிபராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மியான்மரின் புதிய அதிபராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஹிதின் கியாவ், கடந்த வாரம் தனது புதிய மந்திரிசபை பட்டியலை வெளியிட்டார்.

அந்த பட்டியலில், ஆங் சான் சூகியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மியான்மர் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டவர் அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மந்திரியாக செயலாற்ற குறிப்பிடும்படியான தடை ஏதுமில்லை என தெரிகிறது.

எனவே, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரான ஆங் சான் சூகி பல முக்கிய துறைகளின் மந்திரியாக விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply