தற்கொலை அங்கி வைத்திருந்தவர் முன்னாள் புலி உறுப்பினர்

Karunasenaதற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினராவார் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் ஒவ்வொரு இடங்களிலும் கைவிடப்பட்ட பொருட்கள் மீண்டும் கிடைக்கப்பெறுகின்றது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் கூறுவாராயின், அவரின் புரிதல் தொடர்பில் உள்ள பிரச்சினையே தவிர வேறில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply