ஐ.நா சபையால் பயங்கரவாதம் குறித்து இன்னும் வரையறை செய்ய முடியவில்லை: பிரதமர் மோடி

modiபயங்கரவாதம் குறித்து இன்று வரை ஐக்கிய நாடுகள் சபையால் வரையறை செய்ய முடியாமல் இருப்பது துரதிஷ்டமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரசல்ஸில் நேற்று பெல்ஜியம் வாழ் இந்திய மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-ஐ.நா சபையானது பயங்கரவாதம் குறித்த வரையறையை இன்னும் முடிவு செய்யாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும், அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடவடிக்கை தேவை.

பயங்கரவாதமானது மதத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

தீவிரவாதம் என்பது துப்பாக்கியால் மட்டும் வீழ்த்தக் கூடிய ஒன்று அல்ல. தீவிரவாதத்தை, தீவிரவாதிகளை உருவாக்கக் கூடிய சூழ்நிலையை சரி செய்ய வேண்டும்.

உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் தற்போது உணரப்பட்டுள்ளது. இந்தியா கடந்த 40 ஆண்டு காலமாக இந்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

இதனிடையே, அமெரிக்காவில் இன்றும் நாளையும் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply