நடித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: அன்புமணி ராமதாஸ்

anpumaniதமிழகத்தை ஆள்வதற்கு நடித்தவர்களுக்கு வாய்ப்புகொடுத்தீர்கள்,.ஒருமுறை படித்தவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.உங்கள் ஊர் உங்கள் அன்புமணி என்ற தலைப்பில் திருச்சி, கரூர் மாவட்ட பிரச்னைகள், தீர்வுகள் குறித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க வேண்டும், ஆட்சி மாற்றத்தின் காரணமாக திருச்சி நவல்பட்டு பகுதியில் செயல்படாமல் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை செயல்பட வைக்க வேண்டும், காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், திருச்சி விமான நிலைய ஓடுதளப் பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும், காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நொய்யலாற்றுப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும், ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும்.

திருச்சியில் வாழைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும், வாழைக்கு குளிர்பாதன கிடங்கு அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் எடுத்துரைத்திருக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தெரிவிக்கப்பட்ட கோரிóக்கைகள் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் மக்கள் வளர்ச்சிக்காக இங்கு ஒன்று சேர்வதில்லை. எதிரிகளாகத்தான் பார்க்கின்றனர். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள மக்கள் பிரச்னைக்காக ஒன்று சேரவில்லை எனில் இன்னும் 50 ஆண்டுகளானாலும் தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது.

கர்நாடகம், கேரளம், ஆந்திரம் என அந்தந்த மாநிலங்களின் பிரச்னைகளுக்கு ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடுகின்றன.

தமிழகத்தை ஆட்சி செய்ய எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டும் கொடுங்கள் போதும்,. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவோம்.திமுக, அதிமுக ஆட்சி செய்ய 50 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கியும்எந்த வளர்ச்சியும் இல்லை. இரு கட்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.

தமிழகத்தில் நடித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். படித்தவர்களுக்கு இப்போது வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்துக்கு மாற்றும் வர வேண்டும் எனில் அதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். அதுபோல, பொது சேவை உரிமை சட்டம் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும். தமிழகத்திலுள்ளஅனைத்து அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி நிர்வாகம் நடத்தப்படும்.

திருச்சியை 2வது தலைநகராக்க நிபுணர்கள் குழு அமைத்து நிச்சயம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு சில அதிகாரங்கள், உதாரணமாக வேளாண் துறை போன்றவை திருச்சியை மையமாக வைத்து செயல்படும்,. காவல்துறையில் மண்டல ஐ.ஜி.அலுவலகங்கள் இருப்பது போல, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அலுவலகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரணமதுவிலக்கு குறித்த அறிவிப்புக்குத்தான் நான் முதல் கையெழுத்திடுவேன். 13.20 லட்சம் கோடியாக இருக்க வேண்டிய மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதுவால் 2.20 லட்சம் கோடி குறைந்து 11 லட்சம் கோடியாக்ததான் உள்ளது.

ஆறுகளில் மணல் அள்ளப்படுவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.220 கோடி கிடைத்து வருகிறது. உண்மையில் அரசுக்கு ரூ.29,000 கோடி கிடைக்க வேண்டும். இரு கட்சிகளும் தமிழகத்திலுள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருமாவட்டத்திலும் ஒவ்வொரு பொருளுக்கான வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். மாவட்டந்தோறும் திறன் சார்ந்த கல்லூரிகள், பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளப் பாதை விரிவுப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்படும். திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு மருத்துவமனையில் அனைத்து சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் அமைக்கப்படும்.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். தீவிரமாக மதுஅருந்தும் பழக்கத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக மறுவாழ்வு மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டு அரசு செலவில் அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படும். கள்ளச்சாரய விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் அளிக்க இலவச டோல்ப்ரீ எண் அறிவிக்கப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply