குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை

gumar gunaratnamமுன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரட்னத்திற்கு ஒருவருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேகாலை மஜிஸ்திரேட் பிரசன்ன அல்விஸ் நேற்று இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தார். ஒருவருட சிறைத் தண்டனையுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அவுஸ்திரேலியாவில் வதியும் குமார் குணரட்னம் சுற்றுலா வீசாவில் இலங்கை வந்திருந்ததுடன் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வீசா காலம் முடிவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தவேளை 2015 நவம்பர் 04ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

 

கேகாலை அங்குருவெல்ல பகுதியில் தனது தாயாரின் வீட்டில் இருக்கும் போதே கேகாலை பொலிஸாரினால் இவர் கைதுசெய்யப்பட்டார்.

 

கைதாகிய நாள் முதல் 16 தடவைகள் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். மேற்படி வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன கொடிக்கார, பொலிஸ் இன்ஸ்பெக்டர் செனரத், உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுபஹன, குடிவரவு குடியகழ்வு பிரதான கட்டுப்பாட்டாளர் சார்பில் உதவி கட்டுப்பாட்டாளர் (சட்டம்) தசித்த நிரோஷன், மேல் நீதிமன்றம் இலக்கம் 03 பதிவாளர் சார்பாக வமேந்திரா அதிக்காரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

 

பிரதிவாதி சார்பில் அசித்த சிறிவர்தன. நுவன் போப்பகே, ருக்மல் பண்டார. ஆனந்த குமாரசிங்க, ச்சத்துர வெத்தசிங்க, அஜித்குமார, கெனடிக் கொடிக்கார ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

 

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வாகனத்திற்கு குமார் குணரட்னம் அமைத்துச் செல்லப்பட்டபோது குமார் குணரட்னத்தின் தாயார் அவரை கட்டியணைத்து முத்தமிட்டார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply