அனைத்து நாடுகளின் தேசிய முக்கியத்துவத்துக்கு கட்டுப்பட்டதாக அணு பாதுகாப்பு அமைய வேண்டும்: பிரதமர் மோடி

MODIஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நேற்றிரவு விருந்து அளித்தார். அணு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் மூலம் உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மிகப்பெரிய சேவையாற்றியுள்ளதாக புகழாரம் சூட்டினார். பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின்போது, தீவிரவாதம் என்பது அணு பாதுகாப்புக்கும் எப்படி அச்சுறுத்தலாக மாறும்? என்பதை நாம் கண்கூடாக அறிந்து கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விருந்தின்போது ஒபாமாவின் அருகில் அமர்ந்து உணவருந்திய பிரதமர் மோடி, அணு பாதுகாப்பு என்பது அனைத்து நாடுகளின் தேசிய முக்கியத்துவக்கு கட்டுப்பட்டதாக அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விருந்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

நமது எதிரிகள் குகைகளில் பதுங்கி இருப்பதில்லை. மாறாக, தற்காலத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்களுடன் பெருநகரங்களில் வலம்வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து நாம் வேட்டையாட வேண்டியுள்ளது. இவர்களுடன் சிலநாடுகள் கைகோர்த்துக் கொண்டு அணு ஆயுதங்களை கடத்த முயல்வதால் மிகப்பெரிய ஆபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தீவிரவாதம் என்பது வேறொருவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ற மனப்போக்கை நாம் கைவிட வேண்டும். ‘அவனது’ தீவிரவாதி, ‘எனது’ தீவிரவாதி என்ற சித்தாந்தத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தீவிரவாதம் என்பது உலகளாவிய அளவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் இன்னும் தேசிய அளவில் மட்டுமே செயலாற்றி கொண்டிருக்கிறோம்.

தற்கால தீவிரவாதிகள் 21-ம் நூற்றாண்டின் நவீன கண்டுபிடிப்புகளின் மூலம் பேரழிவை ஏற்படுத்த துடிக்கின்றனர். ஆனால் நாமோ, கடந்தகால அணுகுமுறைகளின் மூலமாகவே அவர்களின் சவால்களை சந்தித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தொடர்புகளும், ஆயுத பரிமாற்றமும் உலகளாவியதாக உள்ளது. ஆனால், நாடுகளுக்கிடையிலான உண்மையான ஒத்துழைப்பு என்பது இதற்கு இணையாக இல்லை.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply