வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக பாதுகாப்புத்துறை உயரதிகாரி பொறுப்பேற்றார்
வியட்நாமின் புதிய அதிபராக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரியான டிரான் டாய் குவாங் பொறுப்பேற்றுள்ளார்.சீனாவுடனான வியட்நாமின் உறவுகள் மிகபலவீனமாக உள்ள நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிபர் பதவிக்கான ஒரே வேட்பாளராக டிரான் டாய் குவாங்(59) என்பவரை ஆளும்கட்சியின் உயர்மட்ட பொதுக்குழு கடந்த ஜனவரி மாதம் முன்நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 465 உறுப்பினர்களில் 460 பேர் டிரான் டாய் குவாங்-ஐ ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து அவர் வியட்நாமின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐந்தாண்டு ஆயுள்காலத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வியட்நாம் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் மே மாதம் வியட்நாம் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகை தரவுள்ளார். அப்போது, அவரை சந்திக்கும் அதிபர் டிரான் டாய் குவாங், இருநாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என வியட்நாம் ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply