ஜி-20 உச்சி மாநாடு இன்று லண்டனில் ஆரம்பம்

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் ஆரம்பமாகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 4 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் லண்டன் நகரைச் சென்றடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தொவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்த மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் எடுகக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து தங்களது யோசனைகளை முன்வைப்பதற்கு ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு இந்த மாநாடு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என சர்வதேச அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜி-20 நாடுகளின் தலைவர்களைத் தவிர இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட சில வளர்முக நாடுகளின் தலைவர்களுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்மாநாட்டில் பங்குபற்ற இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழுவினர் நேற்று லண்டனுக்குச் சென்றனர்.

இந்தியப் பிரதமர் இந்த விஜயத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply