மொரிசியஸ் தீவில் மாயமான மலேசிய விமான பாகம் கண்டெடுப்பு?

malasiaமலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014- ம் ஆண்டு, மார்ச் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்பது இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது என்று நம்பப்படுகிற நிலையில் அதன் பாகங்கள் என்று நம்பப்படுகிற 2 சிதைவுகள் சமீபத்தில் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கண்டெடுக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், எம்.எச். 370 விமானத்தின் மற்றொரு பாகம், மொரிசியஸ் தீவில் உள்ள ரோட்ரிக்ஸ் தீவில் ஒரு பிரெஞ்சு தம்பதியரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் தாங்கள் தங்கி இருந்த ஓட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசில் தகவல் அளித்தனர்.

 

இது தொடர்பான தகவல், படம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

 

மொரிசியஸ் தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமான பாகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply