சிரியாவில் ராணுவ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி பைலட்டை சிறைப்பிடித்த கிளர்ச்சியாளர்கள்

siriya2சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதைப்போல அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரசுப் படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் சிரிய பிரிவான நுஸ்ரா முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அபு பிராஸ் கொல்லப்பட்டார். அவருடன் ஏராளமான கூட்டாளிகளும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிரிய ராணுவம் சார்பில் உளவு பார்ப்பதற்காக இன்று அனுப்பப்பட்ட போர்விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர். தரையில் இருந்து தாக்கக்கூடிய ஏவுகணை மூலம் விமானத்தை வீழ்த்திய அவர்கள், விமானத்தில் இருந்த பைலட்டை சிறைப்பிடித்துள்ளனர்.

இதனை சிரிய ராணுவமும் உறுதி செய்துள்ளது. அதேசமயம் பைலட்டை மீட்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அல்கொய்தாவின் நுஸ்ரா முன்னணியினர், பைலட்டை பிடித்து தங்கள் தலைமையகத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் மற்றும் தரையில் கருகிக் கிடக்கும் விமான பாகங்களை சுற்றி கிளர்ச்சியாளர்கள் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply