பருவநிலை மாற்றத்தால் மீன்வளம் குறைகிறது: நாசா ஆய்வில் தகவல்
பருவநிலை மாறுபாட்டால், பசிபிக் பெருங்கடலில், தட்பவெப்பநிலை உயர்ந்து, கடல் நீர் சூடாகிறது. இதனால், தரைப்பகுதியிலும், பருவ காலங்களிலும் ஏற்படும் பாதிப்பு, எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவநிலை மாறுபாடு, உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பனிமலைகள் உருகுவது, பருவம் தவறி மழைப் பெய்வது, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. எல் நினோ தாக்கத்தால், தெற்கு அமெரிக்காவின் வடக்கு கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, நாசா ஆய்வு செய்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடல் நீரின் வெப்பநிலை உயர்வதால் மீன்களுக்கு உணவாகும் தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது குறைந்து விடுகிறது. இந்த தாவரங்களும் குறைந்து வருவதால், மீன்களுக்கு உணவு கிடைப்பது குறைந்து வருகிறது. இதனால், மீன் வளம் குறைந்து வருவதாக நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply