ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பிரதமர் போட்டி

201604060142110299_UN-General-SecretaryOfficeNew-ZealandFormer-Prime_SECVPFஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவியில் தென் கொரியாவின் பான் கி மூன் இருந்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் அவரது பதவிக்காலம் முடிகிறது. எனவே புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன. ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை ஒரு பெண் கூட அந்தப் பதவியை அலங்கரித்தது இல்லை.

 

எனவே இந்த முறை பெண் ஒருவரை, அந்தப் பதவியில் அமர்த்த ஏற்பாடு நடக்கிறது. “ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இதுவே உகந்த தருணம்” என பான் கி மூனும் கூறி உள்ளார்.

 

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் கூறி உள்ளார்.

 

இது குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வர விரும்புகிறேன். இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆக்கப்படும். மேலும், 21-ம் நூற்றாண்டின் உண்மை நிலையை பிரதிபலிக்கிற வகையில் 2 ஆப்பிரிக்க நாடுகளும் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆக்கப்படும்” என கூறினார்.

 

தற்போது ஹெலன் கிளார்க், ஐ.நா. சபையின் வளர்ச்சி திட்டத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார்.

 

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ, தனது நாட்டின் சார்பில் ஹெலன் கிளார்க்கை ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply