நாட்டு நிலைமைக்கு ஏற்பவே பிரபுக்களின் பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தொகையை நீதிமன்ற உத்தரவின் ஊடாக 30 ஆகக் குறைக்க முற்பட்டவர்கள் இன்று முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக் குறித்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 23/2 நிலையியற்கட்டளையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புத் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்பி கேள்வியெழுப்பினார். இதன் பின்னர் ஏற்பட்ட சர்ச்சையின் போது கருத்து தெரிவிக்கும்போதே பீல்ட் மார்ஷல் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், யுத்த காலத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கான படைவீரர் தொகையை 30 ஆகக் குறைக்க கடந்த அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் உத்தரவொன்றைப் பெற்றது. அன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. அவரின் பாதுகாப்புக்கு பொலிஸாரை மாத்திரம் வழங்கும் நோக்குடன் இந்த உத்தரவு பெறப்பட்டிருந்தது. இதனை அமுல்படுத்த கடந்த அரசாங்கம் முயன்றபோது பாதுகாப்பு கவுன்சிலில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை நடைமுறைப்படுத்த நான் இடமளிக்கவில்லை.
தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது.
முக்கியஸ்தர்களுக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரின் தொகையை வெளியிடுவது உகந்ததல்ல. பயிற்றப்பட்ட படையினரே முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்கு வழங்கப்படுகிறார்கள். பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தவறல்ல. 2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், என்னை வீட்டில் இறக்கிவிட்டு அனைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் மீள அழைக்கப்பட்டார்கள். என்னை சிறையில் அடைத்தார்கள். அந்த சிறையில் புலி உறுப்பினர்களும் இருந்தார்கள்.
எனவே மனசாட்சிக்கு பயந்து பேச வேண்டும். இராணுவத் தளபதி ஒருவருக்கு பாதுகாப்பு அவசியம் இல்லையா? முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு நிலைக்கு ஏற்ப மாற்றப்படும். நேற்று 200 பேர் வழங்கப்பட்டிருந்தால் அது இன்று 100 ஆக மாறலாம். நாட்டின் பாதுகாப்பு நிலைக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply