தமிழகம் முழுவதும் 100 இடங்களில் வைகோ உருவபொம்மை எரிப்பு: தி.மு.க.வினர்

dmkமக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், விஜயகாந்தின் நம்பிக்கைக்குரிய வருமான சந்திரகுமார் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலே அவர் இப்படி நடந்து கொள்வதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். இது தொடர்பாக நேற்று பேட்டி அளித்த அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.சாதி ரீதியாகவும், தரம் தாழ்ந்தும் வைகோவின் கருத்துக்கள் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.

வைகோவின் இந்த பேச்சு தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் வைகோவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டு தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சென்னை, நெல்லை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட அனைத்து இடங்களிலும் முக்கிய சந்திப்புகளில் திரண்ட தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்று மட்டும் 100 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது வைகோவுக்கு எதிராக கோஷமிட்ட தி.மு.க.வினர் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சென்னையில் நேற்று 3 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்திருநகர் மேட்டுக்குப்பத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தி.முக..வினர் போராட்டம் நடத்தினர். இதில் திருநாவுக்கரசு, தணிகாசலம், மணி, தயாளன், முத்துராமன், பிரசன்னா, அமுல்ராஜ், சுரேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தி.மு.க.வினரின் இந்த போராட்டம் இன்று 2–வது நாளாகவும் நீடித்தது. பல இடங்களில் இன்று காலையிலும் தி.மு.க.வினர் வைகோ கொடும்பாவியை எரித்து கோஷமிட்டனர்.

குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே இன்று காலை 9 மணிக்கு தி.மு.க. வினர் சுமார் 100 பேர் திரண்டனர். வைகோவை கண்டித்து கோஷங்களை எழுப்பி அவரது உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் நரேந்திரன் தலைமையில் வைகோ உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்தனர். போராட்டத்தில் சி.கே.வி.கிருஷ்ண மூர்த்தி, பிரதர் முனுசாமி, சந்தோஷ் கண்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மீஞ்சூரில் நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் தி.மு.க.வினர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வைகோ கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பேர் பங்கேற்றனர்.

பொன்னேரி பஸ் நிலையத்தில் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் மீஞ்சூர் விஸ்வநாதன், வடக்கு ஒன்றிய செயலர் சுகுமாறன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை எரித்தனர். பால் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆரணி ஆகிய இடங்களிலும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் தலைமையில் வைகோவின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அரியலூர் அண்ணாசிலை முன்பு தி.மு.க.வினர் வைகோவின் உருவபொம்மையை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபாஷ் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வைகோவின் உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வைகோவின் உருவபொம்மையை தீவைத்து எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே திரண்ட தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை எரித்தனர்.

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் திரண்ட தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து வைகோ உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து எரித்தனர்.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, திருவையாறு, பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் வைகோ உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க.வினர் 7 இடங்களில் வைகோ உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினார்கள். நெல்லை சந்திப்பில் வைகோ உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

இதில் பங்கேற்ற தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.பி. எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்ளிட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாளை மார்க்கெட், தென்காசி, சுரண்டை, களக்காடு, வள்ளியூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் 210 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.வினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஒன்று கூடி கருணாநிதி உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் மணிகண்டன் உள்பட 10 பேர் மீது திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றிய யெலாளர் பாலசிங் தலைமையில் பரமன்குறிச்சி மெயின் பஜாரில் வைகோ உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

திருச்செந்தூர், தென் திருப்பேரை பஸ் நிலையங்களின் அருகிலும் போராட்டம் நடந்தது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மணவாளக்குறிச்சி, அழகிய மண்டபம், சுசீந்திரம் ஆகிய 4 இடங்களில் தி.மு.க.வினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே நேற்று இரவு தி.மு.க.வினர் திரண்டனர். வைகோவுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். பின்னர் வைகோவின் உருவ படம் மற்றும் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

கொடைக்கானலில் நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமையில் போராட்டம் நடந்தது. மதுரை தெப்பக்குளம், பெரியார் பஸ் சிலையம், காளவாசல், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு போராட்டம் நடத்தினர் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டியிலும் போராட்டம் நடந்தது.

சேலம் அண்ணாசிலை அருகில் வைகோவின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply