பாம்புடன் நடனம் ஆடிய பெண் பாப் பாடகர் பாம்பு கடித்து மேடையிலேயே பலி

indonisaஇந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா கரவாங் கிராமத்தை சேந்ர்தவர் இர்மா புலே (வயது 29). இவர் உள்ளூரில் பிரபல பெண் பாப் பாடகர்.  மலைப்பாம்பு மற்றும் கொடிய விஷ பாம்புகளுடன் பாட்டுப்பாடி நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்விப்பார். இவரின் நடன நிகழ்ச்சி கரவாங் கிராமத்தில் நடைபெற்றது கொடிய விஷ பாம்புடன் அவர் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது  அவரது தொடையில் பாம்பு கடித்தது . அதற்கு அவர் விஷ முறிவு ஊசியும்ம் போட்டு கொண்டார். தொடர்ந்து அந்த பாம்புடன் 45 நிமிட நேரம் பாடினார். இந்த நிலையில் மேடையிலேயே அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

 

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் மரணம் அடைந்து விட்டதாக கூறி விட்டனர்.

 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பார்வையாளர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த பாம்பு கிங் கோப்ரா வகையை சேர்ந்தது  18 அடி வரை வளரக்கூடியது  இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகின்றன. ஒரே நேரத்தில் இவை ஒரு யானை அல்லது 20 மனிதர்களை கொல்லக்கூடிய விஷத்தை வெளியிடும்.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply