முத்துலிங்கம் தேவகுமார் (பிரபு) மறைவு : கண்ணீர் அஞ்சலி
திருகோணமலைச் சேர்ந்த முத்துலிங்கம் தேவகுமார் தனது பத்தொன்பதாவது வயதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) தன்னை இணைத்துக் கொண்ட சில மாதங்களுக்கு முன்புதான் ’83-ஜூலை நெடுங்குருதி’ திண்ணைவேலியில் இருந்து வெலிக்கடைச் சிறை வரை பாய்ந்து இலங்கையின் அரசியல் போக்கை தலைகிழாக்கிப் போட்டது.
தமிழ் மக்களின் ‘சுயகெளரவம்’ என்பதை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் தலைமை, இனவாத அரசியலாக்கி ’பயங்கரவாதம்’ ஆக சித்தரித்த போது, அதை மூர்க்கமாக எதிர்த்து முகம்கொள்ள கிளர்ந்த ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்களில் தேவகுமார் ஒருவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தபின் ‘பிரபு’ என்றழைக்கப்பட்ட இவரதும் இவரையொத்த பல இளைஞர்களின் கனவுகள், விடுதலைக்கென ஆயுதம் தூக்கியோரின் ’புதிய பயங்கரவாதம்’ கோரமான சிதைத்து அழித்து விட்டுப்போன தமிழ் அரசியல் சூழலில், நோயுற்று `இயற்கை` மரணமெய்திய இவர் போன்றோரின் ’நடுகல்’லில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் சில வார்த்தைகள் `இனி`யாவது பதியப்பட வேண்டும்.
ஆம்,
”மரணம் மகத்தானது வாழ்வு அதைவிட மகத்தானது’’
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply