வாட்ஸ் அப்பின் புதிய தொழில்நுட்பம் சைபர் குற்றவாளிகளின் சொர்க்கமாக மாறிவிடக்கூடாது: அமெரிக்க அரசு
வாடிக்கையாளர்களுக்கு ‘வாட்ஸ்–அப்’பில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒருவருடைய தகவல்களை யாரும் திருட முடியாது.வாட்ஸ்–அப் வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அந்நிறுவனம் அடிக்கடி புகுத்து வருகிறது. வாட்ஸ்–அப் குருப்பில் 100 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதை மாற்றி 256 பேர் வரை உயர்த்தியது.தற்போது வாட்ஸ்–அப்பில் மறையாக்கம் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும். இதனால் இந்த தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் (திருட) செய்ய முடியாது. ஆனால் இது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:
வாட்ஸ்–அப்பில் பாதுகாக்கப்பட்ட ரகசிய தகவல்களை அனுப்பும் வசதியானது, தகவல் தொழில்நுட்பம் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பொதுமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருக வேண்டும். அதே நேரத்தில், குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுப்பவர்கள், தீவிரவாதிகள் போன்றோரை அந்த வசதிகள் ஊக்கப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ் அப்பின் புதிய தொழில்நுட்பம் சைபர்
குற்றவாளிகளின் சொர்க்கமாக மாறிவிடக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply