துறைமுக நகரை நாணய,பொருளாதார வலயமாக்குவது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் : சீன ஜனாதிபதி
சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவி கள் புரியும்போது அரசியல் கட்சிகளையோ அல்லது தனிநபர்கள் தொடர்பிலோ அவதானம் செலுத்துவதில்லை.மாறாக இலங்கை வாழ் மக்களையும் நாட் டின் கொள்கையை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படும். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவினை மூன்றாம் தரப்பினரால் சீர்குலைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் நேற்று சீன மக்கள் பொது மண்டபத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கை சந்தித்தனர்.
இதன்போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply