சமஷ்டித் தீர்வை வலியுறுத்தும் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு பூரண ஆதரவு!
இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வே இறுதியானதென வலியுறுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைக்கு ஜேர்மனி என்றும் துணை நிற்குமென இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனியின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும். அது தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நடைபெறவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்துவது காலத்தின் தேவையாகும். எனவே நாம் தமிழ் மக்களின் அபிலாசையாகவுள்ள சமஷ்டி முறையிலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு எமது முழுமையான ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு புனர் நிர்மாணப் பணிகளுக்கு ஜேர்மனி அரசாங்கம் நிதியுதவி வழங்குவது உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply