பொருத்து வீட்டுத்திட்டம் தான்தோன்றித்தனமான அறிமுகம் : விக்னேஸ்வரன்

vikiதான்தோன்றித்தனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்திட்டமே 65,000 பொருத்து வீட்டுத்திட்டமாகுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம், உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று கைதடி ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

65,000 பொருத்து வீட்டுத்திட்டம் எமது பங்கு பற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், எம்மை மதிக்கவில்லை என்பதற்காக தாம் கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மாணவ மாணவியர் தம் சொந்தக் கால்களில் நின்று முன்னேற முடிவெடுக்க வேண்டும் எனவும் படித்துவிட்டு வேலை கிடைக்காது தவிக்கின்றோம் என்று பலர் கூறுவது எனது காதுகளுக்குக் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது மக்களில் பலர் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டத் தொடங்கிவிட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய நிதிவளம் இல்லாது தவிக்கின்றனர். அவர்களின் வீடுகளைக் கட்டி முடிக்க வெறும் இரண்டு அல்லது மூன்று இலட்சங்களே தேவைப்படுகிறது. வீடுகளைக் கட்டத் தொடங்கி முடிவுறச் செய்ய முடியாது தவிக்கும் பலருக்கு ஒரு சுழலும் நிதியம் மறுமலர்ச்சியை உண்டு பண்ணும். அவ்வாறான ஒரு நிதியத்தை நடைமுறைப்படுத்த எமது அலுவலர்கள் தகைமை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்களைப் பிராந்திய ரீதியாகவோ மத, மொழி, சாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்காது வகையற்றவர்கள் வளம்பெற உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவையாற்றி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply