பூர்ஜ் கலிபாவை விட உயரமான கட்டடத்தை கட்டுகிறது துபாய்

Dubai உலகின் மிகவும் உயரமான கட்டடம் துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டடம் தான். பூர்ஜ்கலிபா கட்டடம் 800 மீட்டர் (2625 அடி உயரம்) கொண்டது. 160 மாடிகளை கொண்டது. இந்த கட்டடத்தை கட்டி முடிக்க ரூ.9 ஆயிரம் கோடி செலவானது. கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரியில் தான் கட்டி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், துபாயில் பூர்ஜ் கலிபா உள்ளிட்ட பல்வேறு உயரமான கட்டடங்களை உருவாக்கிய எமர் கட்டட நிறுவனம் புதிதாக கட்டடம் ஒன்றினை கட்ட திட்டமிட்டுள்ளது. 

 

6 ஆயிரத்து 655 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் அந்த கட்டடம் ஏற்கனவே உள்ள பூர்ஜ் கலிபாவை விட உயரமாக கட்ட பட உள்ளதாக அந்த நிறுவனத்தின் சேர்மன் முகமது அலப்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ”இறுதியான உயரத்தின் அளவு பின்னர் தான் அறிவிக்கப்படும். அந்த கட்டடம் 2020-ம் ஆண்டிற்கு முன்பாக துபாய்க்கு பரிசாக அளிக்கப்படும்” என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply