ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு நார்வே நாட்டின் திருச்சபைகள் ஆதரவு
ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும், ஆசீர்வதிப்பதும் திருச்சபை விதிகளுக்கு எதிரானது என்ற பிரச்சனைகள் எழுந்து வந்த நிலையில், ஓரினச் சேர்க்கை தொடர்பான வாக்கெடுப்பு நார்வே நாட்டின் லூத்தரன் தேவாலயங்கள் கவுன்சில் சார்பாக நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 115 செனட் உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், 88 செனட் உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் அந்நாட்டு தேசிய திருச்சபைகள் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
வரலாற்று ரீதியாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சபை கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலக அளவில் அர்ஜென்டைனா, பெல்ஜியம், பிரேசில், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நெதர்லாந்து , நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா மற்றும் சுவீடன் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு எதிர்ப்புகள் தொடர்ந்து நிலவி வந்த போதிலும், பல திருச்சபைகளில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply