சீனா உடனான பொருளாதார உறவை உடைக்க அண்டை நாடுகள் முயற்சி: பாகிஸ்தான் குற்றம்சாட்டு

சுமார் ரூ.30 லட்சம் கோடி மதிப்பீட்டில் சீனா–பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. இந்த திட்டத்தின்படி கராச்சியில் pksஉள்ள கவதார் கோட்டை, கரகோரம் நெடுஞ்சாலை வழியாக சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்துடன் இணைக்கப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கடற்கரை நகரமான குவாதரில் பாகிஸ்தான், சீனா இடையேயான பொருளாதார உறவு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்களில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் கலந்து கொண்டு பேசியதாவது:-

 

சி.பி.இ.சி திட்டமானது இருநாடுகளிடையேயான ஆழமான உறவின் வெளிப்பாடு. ஆனால், இந்த திட்டத்தின் உள்ளார்ந்த ஆற்றலை அறிந்த அந்நிய சக்திகள், இதில் தலையிட்டு இருநாடுகளிடையேயான உறவினை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

 

46 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தை இந்தியா பகிரங்கமாகவே எதிர்த்து உள்ளது. பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதிகளிலும் இடையூறுகள் மற்றும் கலகங்கள் ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

 

பாகிஸ்தான் சமூக பொருளாதார ரீதியான முன்னேற கிடைத்த வாழ்நாள் வாய்ப்பு இது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே இந்தியாவை குறி வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply