பிரசெல்ஸ் விமான நிலையத்திற்கு செல்லும் 50 விமானங்கள் ரத்து

201604140445411963_50-flights-cancelled-at-Brussels-airport-due-to-strike_SECVPFபிரஸ்சல்ஸில் உள்ள சாவென்டிம் என்ற விமான நிலையத்தில் கடந்த மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்களை  நடத்தினர். இந்த பயங்கர வெடிவிபத்தில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து பிரசெல்ஸ் விமான நிலையத்தில் நூற்றுக்கும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது . இதனையடுத்த கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மீண்டும் விமனாங்கள் இயல்பாக இயங்கத் தொடங்கின. அன்று முதல் மொத்தமுள்ள 225 விமானங்களும் இயங்க தொடங்கின.

இந்நிலையில், பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது வரம்பில் மாற்றம், சம்பள உயர்வு, பணிச் சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகின்றது. விமான நிலைய கட்டுபாட்டாளர்களின் இந்த போராட்டத்தால் கடந்த இரண்டு தினங்களாக பிரசெல்ஸ் விமான நிலையத்தின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

வேலை நிறுத்தத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதனையடுத்து நேற்று புதன் கிழமை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply