ஐ.நா. சபையில் அம்பேத்கர் பிறந்தநாள் – முதல் முறையாக கொண்டாட்டம்
அம்பேத்கரின் பிறந்ததின கொண்டாட்டத்துக்கு ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு ஐ.நா. வளர்ச்சி திட்ட நிர்வாகி ஹெலன் கிளார்க் பேசும்போது, “ஐ.நா. சபையில் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். உலகமெங்கும் உள்ள ஏழை எளியோர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அம்பேத்கரின் பார்வை, இப்போது நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.
இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியான அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய உலகளாவிய அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பேத்கரின் கனவை நனவாக்க இந்தியாவுடன் இணைந்து உழைப்பதற்கு உறுதி கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
ஹெலன் கிளார்க், நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதும், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply