இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதை தடுக்க தவறியவர் கருணாநிதி: ஜெயலலிதா பேச்சு
அருப்புக்கோட்டையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, முதுகுளத்தூர், ராமநாதபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய என 14 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அம்மா திட்டங்கள் அனைத்தும் நீங்கள் எதிர்பாராத திட்டங்கள் மக்களால் நான், மக்களுக்காகவே நான், அதாவது உங்களால் நான் உங்களுக்காகவே நான். உங்களுக்காகவே அர்பணிக்கப்பட்டதுதான் என் தவவாழ்வு சொல்லாத பல திட்டங்களையும் நான் நிறைவேற்றியுள்ளேன் உங்களுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத்தான் தெரியும்.
மீனவர்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதை தடுக்க தவறியவர் கருணாநிதி அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் கச்சத்தீவு நம்மை விட்டு சென்றிருக்காது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது வாய்மூடி மவுனமாக இருந்தவர் கருணாநிதி மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசியவர் கருணாநிதி. உங்கள் அன்பு சகோரியின் அரசுதான் பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மீனவர்களின் படகுகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுவிலக்குப் பற்றி பேசும் அருகதை கருணாநிதிக்கும் இல்லை, திமுகவிற்கும் இல்லை. மதுவிலக்குப் பற்றி கருணநிதி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது. 2016ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.அடிமைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply