கூலிங் கிளாஸ், ஹெட்போன், பூட்ஸ் மாட்டி கலக்கும் ராணுவ நாய்கள்

dog armyவெடிப் பொருட்களை மோப்பம் பிடித்து கண்டறிவது, காணாமல்போன வீரர்களை தேடி கண்டுபிடிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இங்கிலாந்து நாட்டு ராணுவத்தில் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரர்கள் ஜோர்டான் நாட்டு ராணுவத்தினருடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து ராணுவப் படைகளுடன் சென்றுள்ள மோப்ப நாய்களும் அங்கு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜோர்டான் நாட்டு வெயிலை தாக்குப்பிடிக்கும் வகையில் நவீனரக கூலிங் கிளாஸ், ஹெட்போன், பூட்ஸ் மாட்டியபடி போர் பயிற்சியில் கலக்கும் ராணுவ நாய்களின் புகைப்படங்கள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply